காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா; மார்ச் 7ல் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2017 11:02
காரைக்குடி:கும்பாபிேஷக பணிகளால், ஓராண்டு இடைவெளிக்கு பின் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசிபங்குனி விழா மார்ச் 7ம் தேதி தொடங்கி, ஏப்.14 வரை நடக்கிறது.காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசிபங்குனி விழா வரும் மார்ச்7ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுடன் தொடங்குகிறது.
14ம் தேதி கரகம், மது, முளைப்பாரி ஊர்வலம், 15ம் தேதி காலை 9:30 மணிக்கு முத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்படும் பால்குட ஊர்வலமும், மாலை 4:00 மணிக்கு திருக்கோயில் கரகம், மது மற்றும் முளைப்பாரி புறப்படுதலும், இரவு 8:20 மணிக்கு காப்பு பெருக்குதலும் நடக்கிறது. 16ம் தேதி இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், 17ம் தேதி மாலை நான்கு மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.