சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: பரிசீலிக்க வேண்டியதை வழங்கியது போர்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2017 11:02
சபரிமலை: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டிய விபரங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு எழுத்து பூர்வமாக வழங்கியது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி இளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கிறது. இது தொடர்பாக பரிசீலிக்கப்பட வேண்டிய விபரங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதனை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 10க்கு கீழேயும், 50க்கும் மேலே உள்ள வயது பெண்கள் சபரிமலையில் தரிசனம் நடத்த அனுமதி இருக்கும் நிலையில் ஆண், பெண் என்ற பாகுபாடு ஏற்படுகிறதா, அந்த வயதுக்கு உட்பட்ட பெண்களை தவிர்ப்பது அரசியலமைப்பு சட்டம் 26 (எ), (பி) பிரிவுகளை மீறுவது ஆகுமா இந்து சமய கோயில்களை அனைத்து இந்து மத பிரிவினருக்கும் திறந்து கொடுத்தது, பிற்பட்ட பிரிவினருக்கான விலக்கை ரத்து செய்வதற்காக மட்டுமே ஆகும்.அரசியல் அமைப்பு சட்டத்தின் 25 (2) ( பி) படி ஜாதியுடன் சம்பந்தப்பட்ட இந்துக்களின் விஷயம் மட்டுமே சொல்லப்படுகிறது. இதில் பெண்கள் பற்றியோ, இதர மதப்பிரிவினர் பற்றியோ சொல்லப்படவில்லை.
எல்லா பெண்களும் அனுமதிக்கப்படுவது தொடர்பான விஷயத்தில் சாதகமான முடிவை 2007ல் இடது முன்னணி அரசு எடுத்தது. ஆனால் அடுத்து வந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆசாரங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டாம் என்ற முடிவு எடுத்தது. மீண்டும் 2007 முடிவை எடுப்பதாக தற்போதைய இடது முன்னணி அரசு கூறுகிறது. இப்படி அரசுகள் சத்திய வாக்குமூலத்தை மாற்ற முடியுமா? இப்படி பல்வேறு விஷயங்களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு எழுப்பி உள்ளது.