பதிவு செய்த நாள்
23
பிப்
2017
11:02
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனி பகவான் கோவிலில், பல்வேறு மாநில பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா துவக்கியது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும். இந்தாண்டுக்கான முதல் நாள் விழா நேற்று துவக்கியது. விழாவில், பண்ருட்டி சுரேஷ், பெங்களுர் ஸ்வேதா கிருஷ்ணா, புதுச்சேரி ஜெயஸ்ரீ நாராயணன், சென்னை வளர்மதி புருஷோத்தமன், காரைக்கால் சித்ரா கோபிநாத், திருவிழிமழலை கனகா, சின்னமனூர் கிருஷ்ணகுமார் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு முப்பை பத்மினி ராதாகிருஷ்ணன், சிங்கப்பூர் மோகனபிரியன் த்வராஜா, விசாக் உதய்சங்கர், நியூடெல்லி கனகா சுதாகர், சென்னை தந்திதா பிரபு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.