கருட புராணம், முழுவதும் ஜீவனுடைய மரணத்துக்குப் பிறகு நடக்கக்கூடியதைச் சொல்லுவது. அதனால், ஒருவர் காலமாகி பத்து நாட்களுக்குள் கருட புராணம் வாசித்தால், அவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதுபோல், யஜுர் வேதத்தில் அருணம் என்ற பாகத்தில் ஆறாவது ப்ரச்னம், அதற்கு, காட்டுப் பிரச்னம் என்றே பெயர். இதனை சுடுகாட்டில் தான் சொல்வார்கள். இதை வீட்டில் சொல்ல மாட்டார்கள். இதனை அபர காரியத்தில் உள்ள ஒரு பிரயோகத்தையோ, மந்திரத்தையோ, அபர காரியத்தில் என்ன என்ன செய்வோமோ அவற்றை சாதாரண நாட்களில் செய்வதில்லை என்று நம் முன்னோர்கள் ஒரு பழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.