திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இன்று (மார்ச் 18) தீர்த்த உற்சவம் நடக்கிறது. முன்னதாக காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, பெரிய வைரத்தேரில் எழுந்தருளினர். காலை 6:39 மணிக்கு புறப்பட்ட தேர், ஐந்து மணிநேரம் கிரிவலப் பாதையில் சென்று, காலை 11:45 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது.பின்னர் கோயில் நடை திறந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவில் சுவாமி தங்க மயில் வாகனத்தில் அருள்பாலித்தார். இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது.