பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
11:04
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தில், சூரிய பிரபை உற்சவம் விமரிசை யாக நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்பங்குனி உத்திர பிரம்மோற்சவ உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமான, 63 நாயன்மார்கள் ஊர்வலம், 4ம் தேதியும்; 5ம் தேதி, தேரோட்டமும்; 8ம் தேதி, திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன. இந்நிலையில், இரண்டாம் நாள் காலை உற்சவமான, சூரியபிரபை வாகனத்தில், சுவாமியும், ஏலவார்குழலி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கோவிலிலிருந்து காலை, 8:00 மணிக்கு புறப்பட்ட சுவாமி, செங்கழுநீரோடை வீதி, ராஜ வீதிகளில் வலம் வந்தனர். இரவு உற்சவத்தில், சந்திரபிரபை வாகனத்தில் சுவாமியும், அன்ன வாகனத்தில் ஏலவார்குழலி அம்மனும் வீதியுலா சென்றபோது, பக்தர்கள் வழிபட்டனர்.