பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
02:04
உடுமலை: கண்ணமநாயக்கனுார் கிராமத்தில், பழமை வாய்ந்த கரிய பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. உடுமலை அருகே கண்ணமநாயக்கனுாரில் கரிய பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு, இன்று, மாலை, 6:00 மணிக்கு, மங்கள இசையுடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி உட்பட முதற்கால யாக வேள்வி பூஜைகள் நடக்கிறது. இரவு, 11:00 மணிக்கு, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (2ம் தேதி), காலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வியுடன் பூஜை துவங்குகிறது. காலை, 5:30 மணிக்கு மேல், கோபுர கலச கும்பாபிஷேகம், மூலவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் கும்பாபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.