பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
03:04
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்த குருத்தோலை பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்படும் முன், ஜெருசேலம் நகரை நோக்கி சென்ற போது, மக்கள் கைகளில், ஆலிவ் இலைகளை ஏந்தி வரவேற்றனர். அதை நினைவுக்கூறும் வகையில், நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று குருத்தோலை பவனி நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, தேவாலயத்தில் காலை, 6:00 மணிக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி, 7:00 மணிக்கு, குருத்தோலை புனிதம் செய்யப்பட்ட பின், குருத்தோலை பவனி நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில், திரளான மக்கள், கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தனர். தொடர்ந்து, பேராலயத்தின் மேல், கீழ் கோவில்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி, செபமாலை நடந்தது.