மராட்டிய மாமன்னர் சிவாஜி, தன் ராஜ்யத்தையே குருவான சமர்த்த ராமதாசரின் காலடியில் குருதட்சணையாக வைத்துவிட்டார். அந்த குரு நினைத்திருந்தால், ராஜ்ய சுகங்கள் யாவற்றையும் அனுபவித்திருக்க முடியும். ஆனால், குருவுக்கு அப்படி ஒரு நினைப்பு கூட வரவில்லை. தினமும் மாதுகரி பிச்சை எடுத்து தான் சாப்பிடுவர். மதுகரம் என்ற சொல்லில் இருந்தே மாதுகரி என்ற சொல் பிறந்தது. மதுகரம் என்றால் வண்டு. வண்டு எப்படி மலர்களில் இருந்து துளித்துளியாக தேனை சேகரித்து உண்ணுமோ, அதுபோல், ராமதாசரும் கவளம் அளவு பிச்சையே எடுத்தார். யாருக்கும் சிரமம் தராமல், வீட்டுக்கு ஒரு கவளம் வீதம் ஐந்தே ஐந்து வீடுகளில் மட்டும் உணவு பெற்று சாப்பிட்டார். இன்று கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்ட நிறுவனங்கள் எல்லாம் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.