பதிவு செய்த நாள்
11
மே
2017
01:05
சின்னாளபட்டி, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு செட்டிய பட்டி குபேரர் கோயிலில், திருக்கல்யாணம் நடந்தது. சின்னாளபட்டி அருகே செட்டியபட்டியில், சித்ரலேகா சமேத குபேரர் மகாலட்சுமி கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, பரிவார தெய்வங்களான குபேர கணபதி, குபேர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. உற்சவர் மகா கணபதி, சித்ரலேகா சமேத குபேரர் எழுந்தருளல் நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் உற்சவர் ஊஞ்சல் பாத பூஜை சேவை நடந்தது. காசி யாத்திரை, கன்னிகா தானத்துடன் உற்சவர், மூலவருக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண விருந்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மகாலட்சுமி குபேரர் அறக்கட்டளை நிர்வாகி உமாபதி குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு வீடுகள், வணிக நிறுவனங்களில் உற்சவர் எழுந்தருளல் நடக்க உள்ளது. இதற்கான முன்பதிவு, கூடுதல் விபரங்களை, 95004- 74731ல் தெரிந்து கொள்ளலாம்.