அரக்கோணம், தக்கோலம் அருகில் உள்ள சுயம்பு திருமாலீஸ்வரர் கோயில் ஈசனை மகாவிஷ்ணு வழிபட்டிருக்கிறார். மகாலட்சுமி மனமகிழ்ந்து இங்கு உறைந்துள்ளார். பரசுராமர், ஜமதக்னி முனிவர், ரேணுகா பரமேஸ்வரி ஆகியோர் பூஜித்த இத்தலத்தில் பிரார்த்தனை செய்துகொண்டால் இழந்த செல்வம் மீண்டும் கிட்டும் என்பது நம்பிக்கை. இத்தல ஈசனை வழிபட்டு ராஜராஜசோழன் போரில் வெற்றி கண்டார் என்று சொல்லப்படுகிறது.