வானர வீரனான வாலிக்கு, அவனது தந்தை இந்திரன் தங்கச் சங்கிலி பரிசளித்தான். இந்த சங்கிலியை யார் அணிந்துள்ளார்களோ, அவர்களை எதிர்த்து போருக்கு யார் வந்தாலும், எதிரியின் பாதி பலம் வந்து விடும். இந்நிலையில் வாலியின் தம்பி சுக்ரீவனுக்காக ராமர் போரிட நேர்ந்தது. அவர் வாலியுடன் நேருக்கு நேர் மோதாமல் மறைந்து நின்று கொன்றார். இது ஒரு செவி வழி செய்தி. இந்த தங்கச்சங்கிலி ரகசியம், வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறவில்லை.