சொர்க்கம் என்றால் ஒன்று தானே என நினைக்கலாம். ஆனால் சொர்க்கத்தை முழுமையாக அடைய, நான்கு கட்டங்களை மனிதன் தாண்ட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் மோட்சத்தை அடைந்து அதன் வாசலில் நுழைவது ஸாலோக்ய மோட்சம். அந்த தெய்வத்தின் வீட்டுக்குள் சென்று அதன் அருகில் போய் நிற்பது ஸாமீப்ய மோட்சம். அத்தெய்வத்தை கண்கொட்டாமல் பார்த்து அப்படியே உருகி, அந்த உருவமாகவே மாறிவிடுவது ஸாரூப்ய மோட்சம். அந்த தெய்வத்துடன் ஒன்றி கலந்து விடுவது ஸாயுஜ்ய மோட்சம். ஆஹா...கேட்கவே சுகமாக இருக்கும் இந்த மோட்சங்கள் நமக்கு கிடைக்க வேண்டாமா?