பதிவு செய்த நாள்
23
மே
2017
03:05
பெரும்பாலானவர்கள் மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கயிறு கட்டுவார்கள். நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக இது செயல்படும். பட்டுநூலினால் ஆன, காப்புக் கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். மேலும் செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டுக்கொள்வார்கள். இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரபஞ்ச சக்திகளையும், நவக்கிரக கதிர் கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. அதனால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.
குழந்தைகள் முதல் பெரியோர்வரை அனைவரும் இவற்றை அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றினாலான ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது, மந்திரங்களைச் சொல்வது அதிக பலன்களைத் தரும். இது போலவே நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலைச் சேமித்து நம்மைக் காக்கும். மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது. நாயுருவி, சீதேவி செங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களைக் கோர்த்து கழுத்தில் மாலையாக அணிவதும் ஒரு வகையில் காப்பதே. நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீறு அணியத் தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்புக் கயிறுகளை அணிந்து, குழந்தைகளுக்கும் அணிவித்து காத்துக்கொள்ளுங்கள். அது நமது சமய நம்பிக்கையை வளர்ப்பதாகவும் இருக்கும்.