பதிவு செய்த நாள்
23
மே
2017
03:05
நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷகாரகத்தன்மை உண்டு, ஒரு தெய்வீகத்தன்மையும் உண்டு. சாந்தி பரிகாரங்களில் சொல்லும்போது, அந்த கிரகங்களை நேரடியாக பூஜை செய்வதோடு அவற்றுக்கு அதிதேவதை ப்ரத்யதிதேவதை என்று சொல்லப்பட்டிருக்கும் தெய்வங்களையும் பூஜை செய்ய வேண்டும். அப்போது அந்தக் கிரகங்களின் தோஷமானது குறையும். இதைத்தவிர, சூரியனுக்கு சிவபெருமான், சந்திரனுக்கு அம்பாள், செவ்வாய்க்கு முருகன் அல்லது கணபதி, புதனுக்கு மகாவிஷ்ணு, பிருஹஸ்பதிக்கு சிவபெருமான், சுக்ரனுக்கு அம்பாள். சனீஸ்வரனுக்கு சுதர்ஸனர், சிவபெருமான், வெங்கடாசலபதி அல்லது சாஸ்தா, ராகுவுக்கு துர்க்கை, கேதுவுக்கு கணபதி என்று தனியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அந்தந்த கிரகங்களின் பரிகாரங்களோடு கூட அவற்றுக்காக இருக்கும் தெய்வங்களையும் சேர்த்து வழிபட்டால், அந்த தோஷம் குறையும். சில நேரங்களில் முழுமையாகவும் விலக வாய்ப்பு உண்டு. கிரகங்களுக்கும் தெய்வீகத் தன்மை உண்டு.