Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ... ஸ்தலசயன பெருமாள் குளத்தை தூர் வார பக்தர்கள் வலியுறுத்தல் ஸ்தலசயன பெருமாள் குளத்தை தூர் வார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் விநாயகருக்கு 108 பவுனில் தங்கரதம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்  விநாயகருக்கு 108 பவுனில் தங்கரதம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2017
12:06

திண்டுக்கல்:   முழுமுதற் கடவுளாம் விநாயகனை வணங்கி சென்றால்,வெற்றிகள் நம்மை தேடி வந்து சேரும். அதனால் எல்லோருக்கும் செல்லமான தெய்வம் விநாயகர்தான்.
திண்டுக்கல்லிலும் கோபாலசமுத்திரம் கரையில் 108 விநாயகர் ஒரே இடத்தில் வீற்றிருந்து அருள் பாலிப்பது அவ்வூர் மக்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியுமா?

அவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பால் தற்போது 108 பவுனில் தங்கரதம் ஒன்று தயாராகிக் கொண்டிருப்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்? இங்கு கடந்த 1967ல் நன்மை தரும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2001ல் 108 விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டன. கடந்த 2013ல் ஒரே கல்லிலான 32 அடி உயரமுடைய மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலையும் மிக நேர்த்தியாக, பிரம்மாண்டமாக உள்ளது.

இந்த கோயிலுக்குத்தான் தற்போது தங்கத்தேர் தயாராகி வருகிறது. 16 அடி உயரமுள்ள இத்தேருக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 45 பவுனில் மூன்றேகால் அடியில்
தங்கத்தினால் ஆன, உற்சவ மூர்த்தி தயாராக இருக்கிறார்.

இந்நிலையில் 108 பவுனில் தங்க ரதம் உருவாகிறது. தேர் பர்மா தேக்கு; சக்கரம் வேங்கை மரம்; இழுக்கும் பகுதி கருவேலமரம் என பலவகை பலகைகளால் தயாராகிறது. இதற்காக 350 கிலோ தாமிர தகடு, 220 கனஅடி பர்மா தேக்கு, 48 கன அடி வேங்கை மரம், 14 கனஅடி கருவேல மரம் வாங்கியுள்ளனர்.

ஸ்தபதி தியாகராஜன் கூறியதாவது: திருப்பதியில் உள்ளது போல இந்த தேர் வடிவமைக்கப்படுகிறது. திருவுலா உற்சவர், இரண்டு குதிரை, சாரதியாக செயல்படும் அருணன், அறுகோணத்தில் விநாயகர்கள் சிலைகள், நான்கு வெண் சாமரை பெண்கள், ஆறு
யாழிகள், ஆறு கந்தவர்கள், ஆறு விநாயகர், 12 மூஷிகம், ஆறு பூதம், 6 கர்ணகூடு உட்பட பல வேலைப்பாடுகள் இடம் பெறும், என்றார்.

கோயில் நிர்வாகி எம்.மருதநாயகம் கூறியதாவது: ரதம் 108 பவுனில் மிக பிரமாண்டமாய் வடிவமைக்கப்படுகிறது. விநாயகருக்கு நன்கொடையாளர்கள் தாராளமாக
உதவலாம், என்றார். இவரை பாராட்ட: 98421- 31524ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar