Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2).. குடும்பத்துடன் சுற்றுலா ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்).. நெஞ்சுக்கு நிம்மதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்).. நெஞ்சுக்கு நிம்மதி

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
03:06

அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். முக்கிய கிரகங்களில் 11- ல் இருக்கும் கேது தொடர்ந்து நன்மை தருவார். உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன், செவ்வாய், மிதுனத்தில் இருந்து முன்னேற்றத்தைக் கொடுப்பார்கள். தற்போது மிதுனத்தில் இருக்கும் புதன் ஜூன் 29-ல், கடகத்திற்கு மாறி நன்மை தருவார். எடுத்த செயல்களில் வெற்றி காணலாம். ஆன்மிக எண்ணங்கள் மனநிம்மதி தரும். பொருளாதார வளம் மேம்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.  ஜூன் 20, 21-ல்  பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.  ஜூன் 15, 16 ஜூலை 12, 13, 14ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூன் 26, 27ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவும். வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். ஜூலை 15-க்கு பிறகு பொன், பொருள் சேரும். ஜூன் 28- வரை சற்று கவனமாக இருக்கவும். அரசு வகையில் பிரச்னை வரலாம். சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். அதன்பின் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ஜூன் 17, 18, 19, 22, 23, ஜூலை 15, 16-ல் கல்லாப்பெட்டி உங்கள் பொறுப்பில் இருப்பது நல்லது.  ஜூன் 30, ஜூலை 1,2-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். பணியில் ஜூன் 28-வரை கவனமாக இருக்கவும். அதன்பின் பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்வர்.  உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும். ஜூலை 10,11- உன்னதமான நாட்களாக இருக்கும். கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர்.  அரசியல்வாதிகள் நல்ல அந்தஸ்தை பெறுவர். தொண்டர்களின் ஆதரவு இருப்பதால், மேலிடத்தில் எது கேட்டாலும் கிடைக்க வாய்ப்புண்டு.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். ஜூன் 28-வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் சிரத்தை எடுத்தால் தான் வெற்றி கிடைக்கும். ஜூன் 28-க்கு பிறகு முன்னேற்றம் காணலாம்.

விவசாயிகள் நல்ல பலன் கிடைக்கப் பெறுவர்.  நெல், கோதுமை, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல மகசூல் கொடுக்கும். உளுந்து, எள் உள்ளிட்ட கருப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பில்  எதிர்பார்த்த  வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். பெண்களுக்கு முன்னேற்றமான மாதம். கணவரின் அன்பு கிடைக்கும்.   

ஜூலை 3,4-ல் பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெற்று  சிறப்பான நாட்களாக அமையும். ஜூன் 28-க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.   ஒதுங்கிப் போயிருந்த உறவினர்களால் உதவி கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு எழுந்து  சுபமாக பூர்த்தியாகும். புண்ணியத்தலங்களுக்கு சென்று வரலாம். ஜூன் 24, 25-ல் புத்தாடை, நகை வாங்கலாம்.

கண் தொடர்பான பிரச்னை  பூரண குணம் அடையும்.  ஜூன் 28,29 ஜூலை 8,9-ல் உடல்நலனில் அக்கறை காட்டவும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

நல்ல நாள்: ஜூன்15, 16, 20, 21, 24, 25, 30  
ஜூலை 1, 2, 3, 10, 11, 12, 13, 14.-
கவன நாள்: ஜூலை 4, 5, 6 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட  எண்: 3,9  நிறம்: வெள்ளை, சிவப்பு.

பரிகாரம்:
* திங்களன்று சிவன் கோவிலில் தீபம்
* ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று அம்மன் வழிபாடு.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar