பதிவு செய்த நாள்
04
ஜூலை
2017
01:07
குளித்தலை: ராஜேந்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களின் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் மாரியம்மன், காளியம்மன், மலையாள சுவாமி கோவில், 12 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து, கும்பாபி ஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நேற்று பக்தர்கள் ராஜேந்திரம் காவிரி ஆற்றில் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, பெண்கள் முளைப்பாரி எடுத்தல், யானையின் மீது புனித நீர் எடுத்து வரப்பட்டு, ராஜேந்திரம், மருதூர் கிராமங்களின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று, சுவாமிக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. நாளை (ஜூலை, 5) காலை, 10:15 மணியளவில் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.