பழநியில் ஆடி லட்சார்ச்சனை விழா: ஜூலை 17ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2017 06:07
பழநி: தைப்பூசவிழா நடைபெறும் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா வரும் ஜூலை 17ல் மாதப்பிறப்பு அன்று துவங்குகிறது. ஆடிமாத முக்கிய நிகழ்ச்சியாக, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 10 வரை தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நுõறாயிரம் மலர்கள் துõவி லட்சார்ச்சனை நடக்க உள்ளது. ஆக.,10ல் லட்சார்ச்சனை பூர்த்தி விழாவும், ஆக.,11ல் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாக பூஜையும் (வேள்வி) நடைபெறும். ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும் காலை மற்றும் மாலை பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
வெள்ளித் தேரோட்டம்: ஆடி கடைசி வெள்ளி (ஆக.,11ல்) அன்று பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து இரவு அம்மன் வெள்ளத்தேரில் நான்குரத வீதிகளில் உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.