மதுரை அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2017 11:07
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் ஆக., 7ம் தேதி காலை காலை 8 மணிக்கு மணிக்கு நடக்கிறது.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடித் தேரோட்ட விழா நேற்று காலை துவங்கியது. அதிகாலையில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் கொடிமரம் எதிரில் உள்ள மைய மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை கொடி பல்லக்கில் எடுத்து வரப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று முதல் காலை தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். முக்கிய விழாவான தேரோட்டம் ஆக., 7ம் தேதி காலை காலை 8 மணிக்கு மணிக்கு நடக்கிறது. 9ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.