பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
01:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கன்னியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் பல்லவர்மேடு கன்னியம்மன் கோவில் ஆடித்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசயாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை விழா துவங்கியது.அன்று, தாயார் குளத்தில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மன் பூ பல்லக்குடன் வீதியுலா நடந்தது.தொடர்ந்து, நேற்று காலை அம்மனுக்கு விரதம் இருந்தவர்கள், அலகு குத்தி, மேளதாளத்துடன் ஊர்வலம் சென்றனர். சிறுவர்கள் உடம்பில் எலுமிச்சை பழம் குத்தியும், இளைஞர்கள், பெரியவர்கள் அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
நேற்று இரவு, அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில், பகல், 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதி பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.திருப்போரூர்திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில், வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. நேற்று, 58வது ஆடிப்பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு, 108 சங்கு அபிஷேகமும், 10:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், பின் உற்சவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு கூட்டு பிரார்த்தனையும், மாலை, 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு, 8:00 மணிக்கு திருவீதியுலாவும் நடைபெற்று, விழா நிறைவுபெற்றது.