பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
01:07
சிங்கபெருமாள்கோவில்: திருக்கச்சூர் தியாகராஜ சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, திருக்கச்சூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இங்குள்ள சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிவபெருமானே வீடு தோறும் யாசகம் பெற்று, விருந்திட்ட தலமாக கருதப்படுகிறது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி மாதத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் திருநட்சத்திரத்தினமான, சுவாதி நட்சத்திரத்தில், திருக்கைலாயம் சென்றடைதல் விழா நடைபெறும்.இந்த ஆண்டு, விழா, நேற்று காலை, தியாகராஜ சுவாமி, அஞ்சனாட்சி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதைத்தொடர்ந்து, சுந்தரமூர்த்தி நாயனார், திருநட்சத்திரத் தினமான, சுவாதி நட்சத்திரத்தில் திருக்கைலாயம் சென்றடைதல் விழாவும், சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.