பதிவு செய்த நாள்
01
ஆக
2017
12:08
ஆர்.கே.பேட்டை: அமுதாரெட்டி கண்டிகை, பெரியபாளையத்தம்மன் கோவிலில், நேற்று முன்தினம் ஆடி உற்சவத்தை ஒட்டி, திரளான பெண்கள், பொங்கல்வைத்து அம்மனுக்கு படையில் இட்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அமுதாரெட்டி கண்டிகை ஏரிக்கரையில் அமைந் துள்ளது பெரியபாளையத்தம்மன் கோவில், ஆடி உற்சவத்தை ஒட்டி, ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். மாலை, 3:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆடி நான்காம் ஞாயிறு அன்று, பிரமாண்டமான முறையில் உற்சவம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். அமுதாரெட்டி கண்டிகையைச் சேர்ந்த அனைத்து குடும்பத்தினரும் அன்று ஆடு, கோழிகளை அம்மனுக்கு பலியிட்டு, தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்ற காத்திருக்கின்றனர். அன்று இரவு, உற்சவர் அம்மன் வீதியுலா நடைபெறும்.