பதிவு செய்த நாள்
01
ஆக
2017
12:08
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம பகுதிகளில் கல்வெட்டுகளுடன் பலநூறு ஆண்டுகளாக கல் தூண்கள் , தாங்கி கிடக்கும் வரலாற்று தகவலை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மன்னர்கள் காலத்தில், ஆட்சியின் பெருமைகளையும், அரசரின் ஆணைகளையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கற்களில், உளியால் செதுக்கி பதிவுசெய்து வந்தனர். இது போன்ற அறிவிப்புகளுடன் கல் தூண்கள், மக்கள் பார்வைக்கு அந்த காலத்தில் வைக்கப்பட்டன. இவைபல நூற்றா ண்டுகளை கடந்து, தற்போதும் வரலாற்று தகவலைதாங்கி நிற்கின்றன. இதில் பதிக்கப்பட்ட எழுத்துக்கள் பழங்கால பிராமி, கந்தம் மொழிகள் என, கூறப்படுகிறது. பெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள பல கிராம பகுதிகளில் இது போன்ற கல்வெட்டுகளை தாங்கிய கல் தூண்கள் உள்ளன. இவை, வரலாற்று தகவல்களை மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தின் பெருமைகளையும் தாங்கி நிற்கின்றன. இவற்றை சில இடங்களில் மக்கள் பூஜை செய்து வழிபடுகின்றனர். பல நூறு ஆண்டுகளாக, அழியாமல் உள்ள இந்த கல்வெட்டு தகவல்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் வரலாற்று தகவலை அறிந்து, பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.