பதிவு செய்த நாள்
07
ஆக
2017
10:08
மதுரை: ஆடி பவுர்ணமியான இன்று (ஆக., 7) சந்திரகிரகணம் நிகழ்வதையொட்டி பரிகாரம் நட்சத்திரத்தினர் குறித்த விபரம் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது. மகர ராசியில் திருவோண நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கேது கிரகத்தால் (ஆக., 7) இரவு 10:51 - 12:49 மணி வரை சந்திர கிரகணம் உண்டாகிறது. ரோகிணி, அஸ்தம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரம், திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் கோயில் வழிபாடு செய்து உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும். கர்ப்பிணிகள் (ஆக., 7) இரவு 9:00 - 3:00 மணி வரை நிலாவை பார்ப்பது கூடாது. அதன் பின் அதிகாலையில் நீராடி விட்டுசந்திர தரிசனம் செய்யலாம்.
கோல்கட்டா: சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று (ஆக., 7) ஏற்படுகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியும். நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இன்று நடக்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூறி உள்ளார்.