பதிவு செய்த நாள்
08
ஆக
2017
12:08
செங்கல்பட்டு: மேட்டுவீரகுப்பம் கிராமத்தில், மூன்றாம் ஆடி வெள்ளியையொட்டி, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருக்கழுக்குன்ற ம் அடுத்த, மேட் டு வீரகுப்பம் கிராமத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி மாதம், மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு, ஆடி மாதம், மூன்றாம் ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி, நேற்று முன்தினம், பகல், 2:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, க ங்கையம்மனுக்கு, வலையல் அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது.