ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமான மயில் மீது முருகன் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் மயிலை மந்திர மயில் என அழைப்பர். மயில் மீது முருகனை தரிசிப்பதை குக ரகசியம் என்றும் தகராலய ரகசியம் என்றும் ஞானிகள் குறிப்பிடுவர். பாம்பன் சுவாமிகள் மயில் மீது, முருகன் எழுந்தருள வேண்டும் என்னும் பொருளில் பத்து பாடல் பாடியுள்ளார். ஸ்ரீமத் குமார சுவாமியம் என்னும் நூலில் பகை கடிதல் என்னும் தலைப்பில் இப்பாடல்கள் உள்ளன. இதை பக்தியுடன் படித்தால், முருகனை தரிசிக்கும் பேறு கிடைக்கும் என சுவாமிகளின் குறிப்பும் இதில் உள்ளது.