பதிவு செய்த நாள்
31
ஆக
2017
11:08
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு பட்டாபிஷேகம் இன்று (ஆக.,31) மாலை 6:40 மணிக்கு மேல் இரவு 7:04 மணிக்குள் நடக்கிறது.
இவ்விழா கொடியேற்றத்துடன் கடந்த ஆக.,19ல் துவங்கியது. ஆக.,25 முதல் தினமும் ஒரு லீலை, நடந்து வருகிறது. இன்று (ஆக.,31) வளையல் விற்ற லீலை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மேலமாசி வீதி, மேலக்கோபுர தெரு, தானப்ப முதலி அக்ரஹாரம், வடக்கு ஆவணி மூல வீதியில் அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது. கோயிலுக்குள் வந்ததும் இரவு 6:40 முதல் இரவு 7:04 மணிக்குள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. சுவாமியிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோல் பெற்று சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வலம் வந்து சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செப்.,1) நரியை பரியாக்கியது. செப்.,2ல் பிட்டுக்கு் மண் சுமந்தது. செப்.,3ல் விறகு விற்ற லீலை நடக்கிறது.