பதிவு செய்த நாள்
30
செப்
2017
11:09
காரியாபட்டி :கடவுள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டிருந்தாலும், சில கோயில்கள் சில காரணத்திற்காக கட்டப்பட்டது என்பதைநம் முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள். எத்தனையோ விஷயங்கள் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் நமக்கு தெரிய வரும் போது ஆச்சரியமாக இருக்கும். அதே நேரம், தற்போது உள்ள தலை முறையினருக்கு இந்த தகவல்களை தெரிவித்தால் இன்னும் பயனுள்ளதாக, ஆண்டாண்டு காலத்திற்கும் அழிந்து போகாமல் இருக்கும். அந்த அடிப்படையில் காரியாபட்டி சோலைக்கவுண்டன்பட்டியில் ஸ்ரீவேங்கடமுடையான் ஸ்ரீனிவாசா திருக்கோயில் 1941ல் ராமையா ராஜூ, வெங்கிடசாமி ராஜூவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராசி ஒலியை எழுப்பினால் நன்மை: இங்கு பிரதிஷ்டை செய்ய முக்கிய காரணம் இவர்கள் பெருமாளின் தீவிர பக்தர்கள். பர்மாவில் தொழில் செய்து வந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பது வழக்கம். அவ்வாறு சென்ற போது ஒரு முறை அதிக நாட்கள் தங்கியிருந்து பெருமாளை தரிசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ஏழ்மை நிலையில் தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் பார்க்க முடியாமல் சிரமப்பட்டதை கண்டு, வேதனை அடைந்தனர். அனைத்து தரப்பு மக்களும் பெருமானை எளிமையாக சிரமமில்லாமல் தரிசிக்க வேண்டும், திருப்பதியில் உள்ள சிறப்புகளோடு நமது பகுதி பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என எண்ணினர். அதன்படி ’வேங்கட முடையான் என்றால் மலையில் இருப்பவனே , ஸ்ரீனிவாசா என்றால் பக்தர்கள் இதயத்தில் குடியிருப்பவனே’ என பொருள்கொண்ட கோயிலை மிகப்பிரமாண்டமாக எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் ராசிபலனை குறிக்கும் குறியீடு இங்கு உள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் உண்டான ஒலியை எழுப்பினால், நன்மை தரும் என்பது ஐதீகம்.
எளிமையாக தரிசிக்க வழி: மற்றொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. அதாவது கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும்.அப்போதுதான் ஒரு குடும்பம் நிலையாக இருக்க முடியும். நவக்கிரகங்களை வழிபட வேண்டும். பொதுவாக பெருமாள் கோயில்களில் நவக்கிரங்கள் இருந்தாலும்,குடும்ப சமேதமாக வைத்திருக்க மாட்டார்கள்.
தமிழகத்திலே செட்டிநாடு மற்றொன்று சோலைக்கவுண்டன்பட்டி பெருமாள் கோயிலில்தான் நவக்கிரகங்கள் குடும்ப சமேதமாக சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.குடும்ப பிரச்னைகள் தீர, 7 வாரங்கள் சனிக்கிழமைகளில் எள் தீபங்கள் ஏற்றி வந்தால் குடும்ப பிரச்னை தீரும். மிக தத்துருவமாக காட்சி தரும் இக்கோயிலில் கணபதி, கருடாழ்வார், சக்கரத்தாழ்வார்,துர்க்கை அம்மன், நாயன்மார்கள், நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு அனைத்துதரப்பு சமுதாய மக்களும் எளிமையாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
சொர்க்கவாசல் திறப்பு: ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் நவக்கிரக பூஜை, சுவாமி புறப்பாடு, ஊஞ்சலாட்டும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு, அன்னதானம், தைப்பூசத்தன்றுசுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். திருப்பதிக்கு இணையாக இப்படி ஒரு கோயில் இருப்பதுபெரும்பாலாலனவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு தடவை சென்று வாருங்கள். அதன் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்.
தொடர்புக்கு 75399 -43469