பதிவு செய்த நாள்
09
அக்
2017
11:10
சேலம்: கோவிந்தா கோஷம் முழங்க, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ரவுத்து நாயுடு இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பில், செவ்வாய்ப்பேட்டையில், திருக்கல்யாண உற்சவம், நேற்று நடந்தது. உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரர் லட்சுமி நாராயணனுக்கு, காலை, 9:00 மணிக்கு, திருவிளக்கு பூஜையுடன், கல்யாண வைபவம் தொடங்கியது. திருமஞ்சனம், காசியாத்திரை செல்லுதல், மாலை மாற்றுதல், பாதபூஜை உள்பட ஹோம பூஜை நடந்தது. பின், வேத மந்திரம் முழுங்க, கெட்டி மேளம் ஒலிக்க, ஸ்ரீரங்க ராமகிருஷ்ண பட்டாச்சாரியார், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு, மங்கல நாண் அணிவிக்க, கல்யாணம் நடந்தது. பக்தர்கள், கோவிந்தா கோஷம் முழுங்க, கல்யாண வைபவத்தை, பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து, பூப்பந்து விளையாடுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட வைபவம் நடந்தது.