திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. பட்டாபிஷேகத்தில் வைர கிரீடம், செங்கோலுடன் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலைமேலுள்ள உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று இரவு 7:00 மணிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. பட்டாபிஷேகத்தில் வைர கிரீடம், செங்கோலுடன் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று மாலை 6:15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். 16கால் மண்டபம் முன்பு சொக்கப்பான் தீப காட்சியும் நடக்கிறது. டிச.,3ல் சுவாமி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.