சூலூர்: சூலூர் சுற்றுவட்டார கோவில்களில், கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சூலூர் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவிலில், கடந்த, 2ம்தேதி சிறப்பு பூஜைகள் முடிந்து, மாலை கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் சூலூர் பெருமாள் கோவிலில், மாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, தீபஸ்தம்பத்தில் ஜோதி ஏற்றப்பட்டது. சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், இருகூர் ஈஸ்வரன் கோவில், சின்னியம்பாளையம் சிவன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் கார்த்திகை ஜோதி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோவில்களில் கார்த்திகை ஜோதி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.