பதிவு செய்த நாள்
29
டிச
2017
10:12
சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று (டிச.29) அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு அதி காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு,பரமபத வாசல் வழியாக நம்மாழ்வாருக்கு ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை, 4:30 மணிமுதல், 5:00 மணிவரை வேத திவ்ய பிரபந்தம் துவங்கியது. காலை, 5:10 மணிமுதல், 8:45 மணிவரை பக்தி உலா, புண்ணிய கோடி விமானத்தில், வைர அங்கியுடன் உற்சவர் சேவை சாதித்தார். இரவு, 10:00 மணிக்கு, உற்சவர் அலங்கார திருமஞ்சனம், நள்ளிரவு, 12:00 மணிக்கு நம்மாழ்வாருடன் திருவீதி உலா நடைபெறுகிறது.