பதிவு செய்த நாள்
02
ஜன
2018
12:01
தர்மபுரி: ஆங்கில புத்தாண்டையொட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தர்மபுரியில், நேற்று அதிகாலை, 12:00 மணிக்கு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் ஆங்கில புத்தாண்டை வரவேற்று, கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. எஸ்.வி.,ரோடு, சாலை விநாயகர் கோவிலில், காலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின், வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. இதேபோல், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபி?ஷம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், பல்வேறு கோவில்களில், புத்தாண்டை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில் உள்ள பெரியமாரியம்மன் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், மூன்று லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சப்-ஜெயில் ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு அதிகாலையில், 1,008 லிட்டர் பால் அபி?ஷகம் நடந்தது. பின், தங்கக்கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு வெண்ணை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், நள்ளிரவு சிறப்பு திருப்பலி, நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆராதனை வழிபாடு, பங்கு தந்தை சூசை தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.