பதிவு செய்த நாள்
03
ஜன
2018
12:01
பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகர சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் தனிச்சன்னதியாக அருள்பாலித்து வரும் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் விழா கொண்டாடப்படும். இதன் துவக்கமாக டிச., 23 ல் இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து தினமும் காலை மாணிக்கவாசகர் ஆடி வீதி உலாவும், மாலையில் திருவெம்பாவை வாசிக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மேல் உற்சவர் நடராஜ மூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடு நடந்தது. அப்போது கொடிமர மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆருத்ராவையொட்டி சிறப்பு ேஹாமங்கள் நிறைவடைந்து. காலை 4:00 மணி தொடங்கி, பால், பன்னீர், இளநீர், பஞ்சமிர்தம், பழச்சாறு, சந்தனம், விபூதி உள்ளிட்டவற்றால் மகாஅபிேஷகம் நடந்தது. பின்னர் அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம், தீபாராதனைக்குப் பிறகு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. காலை 10:00 மணிக்கு மாணிக்கவாசகர், நடராஜமூர்த்தி புஷ்பகவிமானத்தில் வீதியுலா வந்தனர். மாலை 6:00 மணி தொடங்கி, பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.