பதிவு செய்த நாள்
03
ஜன
2018
12:01
நாமக்கல்: மார்கழி திருவாதிரையை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபி ?ஷம் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசனத்தில் சுவாமி அருள்பாலித்தார். நாமக்கல் அடுத்த, வள்ளிபுரம் வேதநாயகி சமேத, தான்தோன்றீஸ்வரர் கோவிலில், திருவாதிரை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் காலை, சுவாமிக்கும், வேதநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணி முதல், சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, அலங்கரிக்கப்பட்ட சிறப்பு தேரில் உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
* குமாரபாளையம், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில், நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். முக்கிய வீதிகளில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், உலா நடந்தது.
* ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் சுந்தரருக்கு சிறப்பு அபி?ஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து, திருவீதி உலா நடந்தது.
* பொத்தனூர், சக்தி விநாயகர் கோவிலில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மேல், சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த கூத்தபிரானுக்கு, அபிஷேகத்தை தொடர்ந்து, 4:30 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடந்தது. 6:00 மணிக்குமேல், சுவாமி வீதி உலா நடந்தது.
* ப.வேலூரில், பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் மடத்தில், நடராஜருக்கு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்ண அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், தேங்காய்களை கொண்டு, சிவலிங்கம் அமைக்கப்பட்டது. காலை, 9:00 மணியளவில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு, திருக்கல்யாண உற்சவம், 10:00 மணிக்கு மேல், நடராஜர் திருவீதி உலா, மதியம், 1:00 மணியளவில் தீபாராதனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.