நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், ஐயப்ப சுவாமி வீதி உலா நடந்தது. நாமகிரிப்பேட்டை, சேனியர் தெருவில் விநாயகர் கோவிலில் அமைந்துள்ள தர்மசாஸ்தா ஆலயத்தில், புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இந்தாண்டு இருமுடி பூஜைக்கான சிறப்பு வழிபாடு, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், சுவாமி திருவீதி உலா நடந்தது. நாளை, இருமுடி கட்டுதல் மற்றும் இருமுடி பூஜை நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு சபரிமலை யாத்திரை தொடங்குகிறது. ஏற்பாடுகளை குருசாமி சந்திரன் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.