பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
பாகூர் : சேலியமேடு ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. பாகூர் அடுத்த சேலியமேட்டில், திருமுறை நாயகி உடனுறை ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆருத்ரா தரிசன வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. காலை 5.00 மணிக்கு, சிவகாமி சமேத ஆனந்த நடராஜர் பெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 6.30 மணிக்கு கடம் புறப்பாடு, 8.00 மணிக்கு மகா தீபாரதனை, சுவாமி உள் புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, உபயதாரர் மஞ்சினி குடும்பத்தினர் மற்றும் திருமுறை வழிபாட்டு குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.