பதிவு செய்த நாள்
20
டிச
2011
12:12
ஈரோடு: ஊஞ்சலூர் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் 83ம் ஆண்டு ஆராதனை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஊஞ்சலூரில் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சேவா சங்கம் சார்பில், டிச. 14ம் தேதி, 83ம் ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம் ஆரம்பமானது. நாளை வரை நடக்கும் இவ்விழாவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். டிச., 14 காலை ராஜபூஜித ஸத்குரு ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளால் ஆராதனை மஹோத்ஸவம் துவங்கியது. உலக நன்மைக்காகவும், இயற்கை சீர்கேடுகள் பாதிப்பை தவிர்க்கவும், மக்கள் பாதிப்பு இல்லாமல் வாழ்வதற்காகவும் சிறப்பு யாஹ பூஜை, ஸ்வாமி திருவீதி உலா, பசு பூஜை நடந்தது. தினமும் காலை, சிறப்பு அபிஷேகம், வீடுவீடாக சென்று பக்தர்கள் உஞ்ச விருத்தி நடந்தது. இன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், தீபாராதனை நடக்கிறது. நாளை ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சேவா சங்க தலைவர் ஸ்ரீராம், உபதலைவர் ஸ்ரீநிவாசன், காரியதரிசி சுரேஷ் செய்து வருகின்றனர். ஈரோடு - கரூர் மார்க்கத்தில் பயணிக்கும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், நாளை வரை ஊஞ்சலூரில் நின்று செல்லும்.