சோழவந்தான் சுயம்பு சனீஸ்வரபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2011 10:12
சோழவந்தான்: சோழவந்தான் சுயம்பு சனீஸ்வரபகவான் கோயிலில் நேற்று நடந்த சனிபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சனிபெயர்ச்சியை ஒட்டி நேற்று முன்தினம் இரவு யாகசாலைபூஜை துவங்கியது. நேற்று காலை 4 மணிக்கு வரதராஜபண்டிட் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேதம் முழங்க 9 புனிதநீர் நிரப்பிய குடங்கள் யாகசாலையில் வைத்து கணபதிஹோமம், அர்ச்னை நடந்தன. அனைத்து ராசிக்காரர்களுக்கும் 27 நட்சத்திரங்களில் சாந்தி தோஷ பரிகார பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனைகள் நடந்தன. புனிதநீர் குடங்களை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அங்கு சனிஸ்வரபகவானுக்கு புனிதநீர் அபிஷேகம் நடந்தது. வெள்ளிகவசத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீதிபதி வடமலையான், அறநிலையதுறை உதவிஆணையாளர் ராஜமாணிக்கம், கருப்பையா எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, யூனியன் தலைவர் அன்னக்களஞ்சியம், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தக்கார் சந்திரசேகரன், ஆலய ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.