பதிவு செய்த நாள்
31
ஜன
2018
12:01
உடுமலை: உடுமலை, காமாட்சி அம்மன் கோவிலில், 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது. உடுமலை, காமாட்சி அம்மன் கோவில் வீதி, ஏகாம்பரேஸ்வரர் சமேத விஸ்வகர்ம காமாட்சி அம்மன் கோவிலில், லட்சார்ச்சனை சிறப்பு பூஜை நடக்கிறது. கடந்த 28ம் தேதி துவங்கி, நேற்று நிறைவுபெற்றது. லட்சார்ச்சனை நிறைவில், 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு அஷ்டலட்சுமி ேஹாமம், சர்வ மங்களாம்பிகா ேஹாமம், திருஷ்டி துர்க்கா ஹோமம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, 1008 சங்காபிேஷக பூஜை துவங்கியது. ஏகாம்பரேஸ்வரருக்கு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலை,6:00 மணிக்கு, ஆறாம் கால லட்சார்ச்னை நடந்தது. இரவு தீபாராதனையுடன் பூஜை நிறைவுபெற்றது.