பதிவு செய்த நாள்
31
ஜன
2018
03:01
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் அக்ரஹாரம், சிவன் கோயிலில் உள்ள முருகன் சன்னிதியில் தைப்பூசத்தை முன்னிட்டு, சுவாமி முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் வடக்குத்தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 29 காப்பு கட்டுதல் நிகழச்சியுடன் துவங்கியது. ஜன.30 ல் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அன்று இரவு 7:30 மணிக்கு சுவாமியின் வீதியுலா நிகழச்சி நடந்தது. காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனத்துடன் துவங்கியது. பின் மகா கணபதி ேஹாமம், சுப்பிரமணியர் ேஹாமம், துர்க்கா ேஹாமம், லட்சுமி, நவக்கிரக ேஹாமங்கள் நடந்தது. காலை 11:30 மணிக்கு பக்தர்கள் பால்குடம், காவடி பவனி வந்தது. பின் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3:45 க்கு மங்கள தீபாரதனையை தொடர்ந்து சந்திர கிரஹனத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டது.
* குண்டுக்கரை சுவாமி நாத சுவாமி கோயிலில் காலை 6:30 மணிக்கு திருமஞ்சனம், விநாயகர் பூஜை நடந்தது. பக்தர்கள் சொக்கநாதசுவாமி கோயிலில் இருந்து பால்குடம், காவடி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். காலை 9:45 க்கு சுவாமிக்கு பால் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாரதனை நடந்தது. உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பகல் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.
* வழி விடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். சுவாமிக்கு மகா அபிஷேகம், அல்ஙகாரம், தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.