விருதுநகர்:விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளியின் சார்பில், பாண்டியன் நகர் சவேரியார் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா நடந்தது.ஆலயத்தில் திறந்த வெளி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது. நாலாட்டின் புத்தூர் பாதிரியார் நிக்கோலஸ் தலைமை வகித்தார். சவேரியார் ஆலய பாதிரியார் ஜேசுராஜ், பள்ளி பொருளாளர் டி.அமிர்தராஜன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் எட்வர்ட் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பரிசுப்பொருட்களை வழங்கினர். பாதிரியார்கள் செல்வன், ஸ்டீபன், ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவி சுபா நன்றி கூறினார்.