பதிவு செய்த நாள்
06
பிப்
2018
10:02
ராயபுரம்: சென்னை ராயபுரத்தில், வேடர்பறி உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. வள்ளியை திருமணம் செய்ய அழைத்துச்செல்லும் வேடர்பறி உற்சவத்தை முன்னிட்டு கந்தக்கோட்டத்திலிருந்து ஊர்வலமாய் சென்னை ராயபுரத்தில் எழுந்தருளி முத்துக்குமாரசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பாரிமுனையில் உள்ள, முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில், பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இவ்விழாவின், 15ம் நாளான, நேற்று மாலை, ராயபுரத்தில் உள்ள, வேடர்பறி மைதானத்தில், முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். அங்கு, முருகன் தினைப்புலன் காத்து, வள்ளியை சிறை எடுத்து வருவது, கொண்டாடப்பட்டது. இந்த வேடர் பறி உற்சவத்தில், அப்பகுதிகளை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று வள்ளி திருமணம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.