கல்லல் : கல்லல் அருகே சொக்கநாதபுரத்தில் நகர காளியம்மன் கோயிலில் தை கடைசி செவ்வாயன்று நகரத்தார் பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது. நேற்று இவ்விழாவை முன்னிட்டு 215 பேர் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைக்கும் அடுப்பு குடவோலை முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டது. முதலிடத்தை மு.மெ.முத்துபழனியப்பன் குடும்பத்தார் பெற்றனர். அவர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை அவ்வூர் நகரத்தார் செய்திருந்தனர்.