பதிவு செய்த நாள்
12
பிப்
2018
10:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கட்டுப்பாட்டிலுள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி கப்பரை திருவிழா நடந்தது. கோயிலில் பிப்., 5 காப்பு கட்டுடன் விழா துவங்கியது. சிவன், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமி உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைக்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைக்கப்பட்டன. மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் முடித்து, பூஜாரிகள் இரவு 12:00 மணிக்கு முனியாண்டி கோயில் சென்று பூஜை நடத்தினர்.நாளை (பிப்., 13) சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, குருநாத சுவாமி கோயிலுக்கு செல்வார். அங்கு அபிஷேக ஆராதனை நடக்கும். பிப்., 18 இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூச்சப்பரம் கொண்டு செல்லப்பட்டு அம்மன் எழுந்தருள பாரிவேட்டை நடக்கும். பிப். 19 உற்சவர் அங்காள பரமேஸ்வரி மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயில் வந்தடைவார்.