வால்பாறை:வால்பாறை கக்கன் காலனி வீரமுனீஸ்வரன் கோவில் திருவிழா, கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில், 15ம் தேதி பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் செய்து வழிபட்டனர்.நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.