பதிவு செய்த நாள்
10
மார்
2018
11:03
ஆத்தூர்: ஆத்தூர் பிரித்தியங்கராதேவி கோவிலில் நேற்று, தேய்பிறை பைரவாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கராதேவி மற்றும் சொர்ண பைரவருக்கு, நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. பிரித்தியங்கராதேவி, சொர்ண பைரவர் சுவாமிகள், வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.