பராமரிப்பு பணிகளுக்காக பழநி வின்ச் 45 நாட்கள் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2018 12:03
பழநி : பழநி முருகன்கோயில் முதலாம் எண் ’வின்ச்’ ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக மார்ச் 12 முதல் 45 நாட்கள் நிறுத்தப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலுக்கு, எட்டு நிமிடங்களில் செல்லும் வகையில் நாள் தோறும் மூன்று ’வின்ச்-’கள் இயக்கப்படுகிறது. இதில் முதலாம் எண் வின்ச் ஆண்டு பராமரிப்பு பணிக்காக வரும் மார்ச் 12 முதல் நிறுத்தப்படுகிறது. இதில் பெட்டிகள், கம்பிவடம், உருளை உள்ளிட்ட பாகங்கள் ஆய்வு செய்யப்படும். தேய்மானம் அடைந்தவை புதிதாக மாற்றப்படும். வின்ச் பெட்டிகள் கரூர் கொண்டு செல்லப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தையும் 45 நாட்களுக்குள் முடித்து, சோதனை ஓட்டம் நடத்தி வின்ச் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்தகவலை இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.