பத்ரிநாத் கோயிலில் வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடிவிடுவதால், மீதமுள்ள ஆறு மாத காலமே இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று மூடப்படும் சன்னிதி. சித்திரை மாதம் பவுர்ணமியன்று திறக்கப்படும். கோயிலை மூடும் முன்பு பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, நகைகள் அனைத்தையும் களைந்து விடுகின்றனர். சிலையை ஒரு கம்பளத்தால் போர்த்தி, புஷ்ப அலங்காரம் செய்வார்கள். கோயிலில் ஒரு அங்குல கனம் கொண்ட திரியினால் விளக்கேற்றி நடையை அடைத்து விடுவார்கள். ஆறு மாதங்கள் கழித்து கோயிலைத் திறக்கும்போது சாத்திய புஷ்பங்கள் வாடாமல் இருக்கும். ஏற்றிய தீபமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்.